பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் விவாகரத்து... 3வது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது!

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் விவாகரத்து... 3வது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது!

உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் 3-வது திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது.

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உலக அளவில் மிகவும் பிரபலம். இவர் 15 வயதில் இருந்து மேடைகளில் பாடி ரசிகர்களை கவர்ந்தவர். அதே போல் இவரது பாப் ஆல்பங்கள் உலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவை.

பிரிட்னி, கடந்த 2004-ம் ஆண்டு ஜேசன் ஆலன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வருடத்திலேயே அவரை பிரிந்த பிரிட்னி, அமெரிக்க பாடகரான கெவின் ஃபெடர்லைன் என்பவரை திருமணம் செய்தார்.

ஃபெடர்லைனுடனான திருமணம் 2007 வரை மட்டுமே நீடித்தது. அவரை விவாகரத்து செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 41 வயதில், தன்னைவிட 12 வயது குறைவான அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தாம் கர்ப்பமாக இருப்பதாக பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிவித்த நிலையில், சில நாட்களில் கர்ப்பம் கலைந்து விட்டதாக வருத்தத்துடன் பதிவிட்டு, பின்னர் அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியை கரம் பிடித்தார். ஆனால் இந்த திருமண உறவும் நீடிக்கவில்லை.

இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாம் அஸ்காரி, ஆறு வருட அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பிறகு, தங்கள் உறவை பரஸ்பரம் முடித்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தங்கள் இருவருக்கும் இடையேயான அன்பும், மரியாதையும் எப்போதும் இருக்கும் என்றும் அஸ்காரி பதிவிட்டுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பிரச்சினைக்கு இடையே, பிரிட்னி ஸ்பியர்ஸ் குதிரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் இரண்டு குதிரைகள் வாங்க இருப்பதாகவும், அவற்றின் பெயர் சோபி, ரோர் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in