ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை: கணவர் அதிரடியாக கைது!

பெண் காவலர் சத்யா, கைது செய்யப்பட்ட வினோத்
பெண் காவலர் சத்யா, கைது செய்யப்பட்ட வினோத்

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பத்துகண்ணு பகுதியைச் சேர்ந்தவர் சத்யா(26). இவர் புதுச்சேரி ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் வினோத் மின்துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 12-ம் தேதி தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்ற சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து சத்யா குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு சென்ற வில்லியனூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

பெண் காவலர் சத்யா
பெண் காவலர் சத்யா

இந்நிலையில், சத்யாவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் வினோத் தான் காரணம் என போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட காவலர் சத்யாவின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது சத்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பணிபுரியும் போலீஸார் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in