விடுமுறையில் அதிர்ச்சி... நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் மூழ்கி ஆசிரியர் உயிரிழப்பு

ஆசிரியர் பிரதீப் பால்சாமி
ஆசிரியர் பிரதீப் பால்சாமி
Updated on
1 min read

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கடாம்பாற அணை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

நான்கு பேரும் காடம்பாறை அணை பகுதியில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், பிரதீப் பால்சாமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்ட அவர்களது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், தண்ணீர் அதிக அளவில் வந்ததால் அவர்களால் பிரதீப்பை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து, நண்பர்கள் உடனடியாக காடம்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் உடலை தேடினர். நீண்ட நேரத்துக்கு பிரதீப் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in