தன்னை அடித்த பெண் காவலரை எதிர்த்து கேள்வி கேட்ட லாரி ஓட்டுநர், கடைசியில் அவரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூரில் உள்ள துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் செல்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாகவே துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி செல்லும் கன்டெய்னர் லாரிகளை ஆவடி சரகத்துக்கு உட்பட்ட மணலி, சாத்தாங்காடு, எர்ணாவூர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் மறித்து நிற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிருந்து செல்ல வேண்டுமானால், போலீஸாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று இப்படி வரிசையில் நிற்காத லாரி ஓட்டுநர், நேராக துறைமுகத்தை நோக்கி வண்டியை ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த எர்ணாவூர் சந்திப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், அந்த லாரியை மடக்கி லாரி ஓட்டுநரை சரமாரியாக அறைந்ததாக கூறப்படுகிறது.
அனைவருக்கும் முன்னிலையில் வைத்து பெண் காவலர் அடித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த லாரி ஓட்டுநர், அந்தப் பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் அங்கு உடனடியாக வந்து அந்தப் பெண் காவலரைச் சுற்றி வளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் பெண் காவலர் திணறிப் போனார்.
இதனால் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அங்கிருந்த உதவி ஆய்வாளர் தலையிட்டு அவர்களிடம் சமாதானம் பேசினார்.
அடித்ததற்காக பெண் காவலர் மன்னிப்பு கேட்டால்தான் தாங்கள் செல்வோம் என அவர்கள் கூறியதையடுத்து, வேறு வழியின்றி, "சாரி சொல்லிட்டேன் போதுமா.." என அந்தப் பெண் காவலர் கூற, லாரி ஓட்டுநரும், சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது