அதிர்ச்சி... மனைவி, மகள்களை சுட்டுக்கொன்று போலீஸ்காரர் தற்கொலை

துப்பாக்கி
துப்பாக்கி
Updated on
1 min read

மனைவி, இரண்டு மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர் வெங்கடேஷ்வர்லு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற வெங்கடேஷ்வர்லு, திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெங்கடேஷ்வர்லு வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது சொத்துக்களையும் வேலையையும் இரண்டாவது மனைவி மற்றும் மகனுக்கு கொடுங்கள் என்றும் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in