குடிபோதையில் பயணியையும் ரயில்வே எஸ்ஐயையும் தாக்கிய காவலர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை
குடிபோதையில் பயணியையும் ரயில்வே எஸ்ஐயையும் தாக்கிய காவலர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை, பெரியமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வந்த சபரிகுமார்(28), நேற்றிரவு சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் இருந்த காவலர் சபரிகுமார், தேநீர் குடிக்க வந்த பயணி ஜாவித்திடம், பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். அதைத் தடுக்கவந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளரை அவதூறாகப் பேசியதோடு, அவரைத் தள்ளிவிட்டு எச்சில் துப்பி மிரட்டல் விடுத்துச் சென்றார்.

உதவி ஆய்வாளரை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையானது. காவலர் சபரிகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில்வே போலீஸார் பெரியமேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் காவலர் சபரிகுமாரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினார்.

விசாரணையில் காவலர் சபரிகுமார் குடிபோதையில் ரயில்வே போலீஸாரைத் தாக்க முற்பட்டு மிரட்டியது நிரூபணமானதால், அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து, காவலர் சபரிகுமாரை பெரியமேடு போலீ!hர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in