தட்டுப்பாடின்றி சிறைக்குள் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை: சிக்கிய சிறைக்காவலர் சஸ்பெண்ட்!


தட்டுப்பாடின்றி சிறைக்குள் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை: சிக்கிய சிறைக்காவலர் சஸ்பெண்ட்!

வேலூர் மத்தியச் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளிடமிருந்து கஞ்சா, செல்போன் பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதிகளுக்குக் கஞ்சா சப்ளை செய்ததாக தலைமை சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்தியச் சிறையில், சிறைக் காவலர்கள் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 15 கிராம் கஞ்சாவும், தண்டனை கைதிகள் இருக்கும் சிறையின் 7-வது பிளாக்கில் இருந்து ஒரு செல்போன் பேட்டரியையும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது.

சிறைக்குள் கஞ்சா வந்தது குறித்து சிறைத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தலைமை சிறைக் காவலர் விஜயகுமார் என்பவர் கைதிகளுக்குக் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக் காவலர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் சிறையில் கஞ்சா மற்றும் செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகச் சிறைத்துறை புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in