
பிரபல நடிகை கௌதமியின் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த அழகப்பன் வீட்டிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
பிரபல நடிகை கௌதமி தமிழகம் முழுவதும் சொத்துகளை வாங்கியிருந்த நிலையில், அவற்றை விற்பனை செய்ய அழகப்பன் என்பவக்கு பவர் ஆஃப் அட்டார்னி செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரில் கௌதமியின் தாய் வசுந்தரா தேவி பெயரில் வாங்கப்பட்ட 46 ஏக்கர் சொத்துகளை விற்றுத் தருவதாக அழகப்பன் போலியான ஆவணங்களை தயாரித்து, கெளதமியின் கையெழுத்தை போட்டு சொத்தை அபகரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், அழகப்பன், அவரது மனைவி நார்ச்சல், மகன் சதீஷ்குமார், மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் தனது சொத்துகளை அபகரித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடிகை கெளதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே, அழகப்பனுக்கு பாஜகவினர் உதவி செய்வதாக கூறிய அக்கட்சியில் இருந்து விலகினார் கெளதமி.
இதனிடையே, அழகப்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நில மோசடி புகாரில் மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் அழகப்பன் தொடர்புடைய 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று சோதனை நடத்தினர். காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அழகப்பன் வீட்டில் இருந்த நிலப்பத்திர ஆவணங்களை சரிபார்த்ததுடன் 11 அறைகளுக்கு சீல் வைத்துச் சென்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!