போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பீகாரில் போலீஸ் பணிக்காக 21,391 காலியிடங்களை நிரப்பு அரசு திட்டமிட்டது. இதற்காக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் 1ம் தேதி 37 மாவட்டங்களில் 526 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக இதுவரை 21 மாவட்டங்களில் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!