பயங்கரம்... இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி... கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பு!

ஸ்ரீநகரில் தேடுதல் வேட்டையில் காவல் துறை
ஸ்ரீநகரில் தேடுதல் வேட்டையில் காவல் துறை

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை தீவிரவாதி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலர் நேற்று பயிற்சியிலும், விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒருவரை துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த போலீஸார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்த, மஸ்ரூர் அகமது வானி என்பது தெரியவந்தது.

படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி
படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி

மேலும் வானியை துப்பாக்கியால் சுட்ட நபர், பஸித் தர் என்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தர்ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் வானியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கண், நெஞ்சு மற்றும் முதுகில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

தீவிரவாதியை கைது செய்ய தேடுதல் வேட்டையில் போலீஸார்.
தீவிரவாதியை கைது செய்ய தேடுதல் வேட்டையில் போலீஸார்.

இதனிடையே கடந்த ஓராண்டில் மட்டும், பணியில் இல்லாத 19 காவலர்களைத் தீவிரவாதிகள் குறிவைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறையினர் கூடுதல் இயக்குநர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in