25 நாள் பச்சிளம் ஆண்குழந்தை கொலை… நாடகமாடிய தாய் கைது!

25 நாள் பச்சிளம் ஆண்குழந்தை கொலை… நாடகமாடிய தாய் கைது!

தேனி மாவட்டம் கம்பத்தில் 25 நாள் பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

போடியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (23) என்பவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினேகாவிற்கு வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி குழந்தை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர், பால் கேனுக்குள் பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்த புகாரில், கம்பம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்திய போது, குழந்தையை கொன்றது தாய் சினேகாதான் என்பது உறுதியானது.

சம்பவத்தன்று சினேகா, தனது தாயை குளிர்பானம் வாங்க அனுப்பிவிட்டு குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு குளிக்க பாத்ரூமிற்கு சென்றுவிட்டார். பின்னர் காணாமல் போன குழந்தையை தேடுவது போல் அனைவருடனும் சேர்ந்து நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில், எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார், வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in