திருமணமான பெண்ணிடம் அத்துமீறல்... கட்டிலில் கட்டி வைத்து கான்ஸ்டபிளுக்கு தர்ம அடி!

ராஜஸ்தான் போலீஸ்
ராஜஸ்தான் போலீஸ்

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை உள்ளூர் மக்கள் கட்டிலில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கான்ஸ்டபிள் மகேஷ் குமார் குர்ஜார் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 30 வயது பெண் ஒருவர் தனியாக இருந்த போது, அவரது வீட்டிற்குச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ​​அங்கே திரண்ட அக்கம்பக்கத்தினர், பெண்ணிடம் அத்துமீறிய கான்ஸ்டபிளை பிடித்து கட்டிலில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பஸ்வா காவல் நிலைய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று குர்ஜாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் அவர் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

 பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம்

பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வியாழக்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், செவ்வாயன்று நடந்த இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்காததற்காக பஸ்வா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கான்ஸ்டபிள் குர்ஜாரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக வட்ட அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் குர்ஜார் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வட்ட அதிகாரி பண்டிகியு ஈஸ்வர் சிங் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in