அதிர்ச்சி... வங்கிகளில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி; இரண்டு பேர் கைது!

அதிர்ச்சி... வங்கிகளில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி; இரண்டு பேர் கைது!

தஞ்சாவூர் அருகே தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து 69 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மற்றும் அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை ஆகிய இரண்டு வங்கிகளிலும் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் கொடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில்பத்து  கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (54) என்பவர் தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும்  கடந்த ஓராண்டில் 27 முறை 2 கிலோ போலி நகைகளை வைத்து 69 லட்சம் ரூபாய்  மோசடி செய்துள்ளார்.

இதுதொடர்பாக இரண்டு வங்கிகளின் கிளை மேலாளர்களும் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடியில் ஈடுபட்டு புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த  ரமேஷையும்,  அவருக்கு உடந்தையாக இருந்த மன்னார்குடியை சேர்ந்த முருகையன் என்பவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இதுபோன்று வேறு எங்காவது போலியாக நகைகளை அடகு வைத்து பண மோசடி செய்துள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in