கென்யா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா என்ற போலி வழக்கறிஞரை கென்யா காவல்துறை கைது செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா பகுதியை சேர்ந்தவர் பிரையன் முவெண்டா இவர் அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிரையன் திறம்பட செயல்பட்டதால் அவர் பங்கேற்ற 30 வழக்குகளில் 26 வழக்குகளை திறம்படி வாதாடி வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சில வழக்கறிஞர்கள் பிரையனின் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கென்யா போலீஸார் கைது செய்தனர்.
அவர் வாதாடி வெற்றிப் பெற்ற வழக்குகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கென்யா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!
குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!