அதிர்ச்சி... பிளஸ் 2 மாணவி பலாத்காரம்...வாக்கிங் சென்ற போது நடந்த பயங்கரம்!

பலாத்காரம்
பலாத்காரம்

உத்தரப்பிரதேசத்தில் நடைபயிற்சி சென்ற பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹியில் பிளஸ் 2படிக்கும் மாணவியை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று வழிமறித்து ஆபாச செய்கைகளை செய்துள்ளார். அத்துடன் மாணவியைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

பலாத்காரம்
பலாத்காரம்

அப்போது மாணவி, அந்த நபருடன் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மாணவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றார். இதனால் அந்த மாணவி, சப்தம் போடவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

கைது
கைது

அவர்களைக் கண்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, உஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரரணை நடத்திய போது, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றவர்

சுஜித் கவுதம்(40) என்பது தெரிய வந்தது.பள்ளி மாணவி நடைபயிற்சி சென்ற போது அவர் முன் நின்று ஆபாச சைகைகளை சுஜித் கவுதம் காட்டியுள்ளார. அத்துடன் மாணவியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாகக்கும் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைக்கு உடனே குரல் கொடுக்கும் மோடி, மணிப்பூர் பிரச்சினையில் மவுனம் காப்பது வெட்கக்கேடு’

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in