ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட் திருடன்: அதிமுக தலைமையகத்தில் பரபரப்பு!

ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட் திருடன்: அதிமுக தலைமையகத்தில் பரபரப்பு!

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் இன்று
நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் வந்ததையொட்டி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 23-ம் தேதி நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட் திருடன், நிர்வாகி ஒருவரிடம் திருட முயன்ற போது கையும், களவுமாக சிக்கினார். அவரைப் பிடித்து தொண்டர்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதிமுக தலைமையகத்திற்குள்ளேயே பிக்பாக்கெட் திருடன் புகுந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in