சட்டைப்பையில் வெடித்து சிதறிய செல்போன்... பைக்கில் சென்ற மூவர் படுகாயம்; கடலூரில் அதிர்ச்சி!

செல்போன் வெடித்து விபத்து
செல்போன் வெடித்து விபத்து

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது வெடிப்பதாக புகார்கள் இருந்து வருகிறது. செல்போனில் சார்ஜரை தவறாக பயன்படுத்துவது மற்றும் மின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தொழில்நுட்பவியல் அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பிடம் இதற்கு முறையான விளக்கம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
விபத்து

கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சோதனை பாளையம் பகுதியில் நடைபெறுகிற சுப நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரும் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராஜ் செல்போனை பாக்கெட்டில் இருந்து தூக்கி வீச முயற்சித்த போது, இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்து
விபத்து

இதில் வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடும் வெயில் காரணமாக செல்போன் வெடித்து சிதறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in