`வலிமை' ரிலீஸான தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பரபரப்பு

`வலிமை' ரிலீஸான தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பரபரப்பு

கோவையில் `வலிமை' திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் வாகனம் சேதம் அடைந்தது. ரசிகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்த `வலிமை' திரைப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்று வெளியானது. அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் தியேட்டர் போடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாலாபிஷேகத்துடன் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாடினர்.

இதனிடையே, கோவை நூறடி சாலையில் கங்கா திரையரங்கத்தில் வலிமை படம் வெளியானது. அதிகாலை 5 மணி முதல் தியேட்டர் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. ராமசந்திரன் என்ற ரசிகரின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in