பெட்ரோல் குண்டு வீச்சு... ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் சந்திப்பு

சென்னை காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர்

பெட்ரோல் குண்டு வீச்சுத் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்தார்.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகை பகுதியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் குடியரசுத் தலைவர் இன்று சென்னை வரவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in