
கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக, நந்தனம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திமுகவினர் தான் இதை செய்திருப்பார்கள் என்பதாக சொல்லும் பாஜகவினர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் சிறையில் இருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பதை சுட்டிக்காட்டி பாஜக மீது திமுக சந்தேகத்தை கிளப்புகிறது.
இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் உண்மையான காரணத்தை கண்டறிய போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர். அதற்காக சிறையில் இருக்கும் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அதற்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருக்கா வினோத்தை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கருக்கா வினோத்திடம் காவல்துறை நடத்தும் விசாரணையில் உண்மையின் பின்னணி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!