போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் மயங்கி விழுந்து மரணம்... சென்னையில் மீண்டும் அதிர்ச்சி!

கஞ்சாமணி எனும் தீனதயாளன்
கஞ்சாமணி எனும் தீனதயாளன்BG

சென்னையில் நண்பர்களுடன் போதை ஊசி செலுத்திக்கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பலியாகியுள்ளார். ஏற்கெனவே சென்னையில் போதை ஊசியால் பலர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சாமணி எனும் தீனதயாளன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கஞ்சாமணி எனும் தீனதயாளன்
கஞ்சாமணி எனும் தீனதயாளன்

போதைப் பழக்கத்திற்கு அடிமையான கஞ்சா மணி போதை ஊசி செலுத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கஞ்சா மணி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு(20) ஆகியோருடன் சேர்ந்து பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டார்.

அப்போது கஞ்சா மணிக்கு போதை தலைக்கேறி‌ மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டாளிகள், அவரை மீட்டு புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது. அங்கிருந்த மருத்துவர்கள் கஞ்சா மணிக்கு முதலுதவி அளித்து விட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

அங்கு சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீஸார் கஞ்சா மணி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சஞ்சய் மற்றும் பிரபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சாமணி@ தீனதயாளன்
கஞ்சாமணி@ தீனதயாளன்

ஏற்கெனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தற்போது சரித்திர பதிவேடு குற்றவாளி ஓருவர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in