
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
வத்தலகுண்டு மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வத்தலகுண்டு போலீஸார் அதிரடியாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களின் சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அங்கு மசாஜ் சென்டர் நடத்தி வந்த வத்தலகுண்டு சாமிநாதன், அவரது கூட்டாளிகள் சென்னை ஜெயபிரகாஷ் மற்றும் பெண் ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இவர்கள் மூன்று பேரும் செல்போன் மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த வத்தலகுண்டு போலீஸார், அவர்களிடமிருந்து பெண் ஒருவரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!