வில்லங்க புகார்... மனைவிக்கு அபராதம்... கணவன் விடுதலை

வில்லங்க புகார்... மனைவிக்கு அபராதம்... கணவன் விடுதலை

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மீது பொய் புகார் கூறிய மனைவிக்கு கோவை போக்சோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கோவையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, தனது தங்கையை கணவர் பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது மனைவி கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு கோவை பாேக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறினார். இதனிடையே, தினந்தோறும் குடித்து வரும் கணவனை மிரட்டவே பொய் புகார் அளித்தேன் என்று பாண்டியனின் மனைவி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், கணவரை மிரட்டுவதற்காக பொய் புகார் அளித்த மனைவிக்கு போக்சோ சட்டத்தின் 22-வது பிரிவின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் அளித்து, பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.