நெல்லை இளம்பெண் படுகொலை வழக்கு- 4வது நாளாக உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டம்
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிகரிசல்குளம் மணிமேடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகள் சந்தியா (18). இவர் நெல்லை நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 2ம் தேதி கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுப்பதற்காக அருகில் உள்ள குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மேலமுனைஞ்சிப்பட்டியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் கத்தியால் அவரை வெட்டி கொலை செய்தார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் நெல்லை நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர். கொலை செய்த வாலிபர், சந்தியாவை காதலிக்க கூறி டார்ச்சர் செய்து வந்ததாகவும், சந்தியா மறுத்ததால், ஆத்திரத்தில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டம்
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

சந்தியாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தியாவின் உடலை வாங்க மறுத்து, அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 4வது நாளை எட்டி உள்ளது. இது தொடர்பாக நெல்லை உதவி ஆட்சியர் அயூப்கான், துணை காவல் ஆணையாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவு வருவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in