
மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பஞ்சாயத்து செயலாளர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜோய்நகர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சைஃபுதீன் லஸ்கர் என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜக, சிபிஎம் கட்சியினர் மீதும், பாஜகவின் மாநில அரசின் மீதும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அம்தாங்கா கிராமத்தில், கிராம பஞ்சாயத்து செயலாளர் ரூப்சந்த் மொண்டல் என்பவர் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் முகர்ஜி, படுகாயமடைந்த கிராம செயலாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுவெடிகுண்டை வீசி கொலை செய்ய முயன்றனரா அல்லது, விபத்தா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!