கடவுள் கொலை செய்யச் சொன்னார்... பெயிண்டரை கொன்ற கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

கொலை செய்யப்பட்ட செந்தில் குமார்
கொலை செய்யப்பட்ட செந்தில் குமார்
Updated on
2 min read

சென்னையில் பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கடவுள் சொன்னதால் இந்த கொலையைச் செய்தேன் காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் முலம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு ஒருவர் தான் திருமுடி விநாயகர் கோயில் தெருவில் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டதாக கூறி கத்தியுடன் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த கமல் உஸ்மான்
சரணடைந்த கமல் உஸ்மான்

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் இருந்து கத்தியைப் பறிமுதல் செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைதான நபர் திருவான்மியூர் குப்பம்,ஜெயராம் தெருவைச் சேர்ந்த கமல் உஸ்மான்(48) என்பது தெரியவந்தது.

மேலும் திருவான்மியூர் மீனவ குப்பத்தில் உஸ்மான் தனியாக வசித்து வருவதும், 20 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியைப் பிரிந்து விட்டதும் தெரிய வந்தது. 201-ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தீவிர சிவ பக்தராக மாறிய அவர் தினமும் அப்பகுதியில் உள்ள மூக்கு பொடி சித்தர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ‌.

இந்நிலையில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் செந்தில்குமார் (40) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து சித்தர் கோயில் அருகே வாடகைக்கு அறை எடுத்து வடமாநில தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார்.

மேலும் செந்தில்குமார்(40) தினமும் பெண்கள் பலரை அழைத்து வந்து கோயில் வாசலில் நின்று பேசி வருவது உஸ்மானுக்கு பிடிக்கவில்லை. இதனால் செந்தில்குமார் கெட்டவன் என்று உஸ்மான் உள்ளுணர்வுக்கு தோன்றியதால் இதுகுறித்து கடவுளிடம் முறையிட்டதாக கூறினார். அப்போது கடவுள் தன்னிடம் செந்தில்குமாரை கொலை செய்ய சொன்னார்.

ஏற்கெனவே வீட்டிலிருந்து கொண்டு வந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்தாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலையுண்ட செந்தில் குமார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடவுள் கூறியதால் ஓருவரை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in