ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் சிறுமிக்கு கொடுமை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!

ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் சிறுமிக்கு கொடுமை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த இளைஞன், மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கட்காரி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது குற்றவாளி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி கைது செய்யப்பட்டான். அவன் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, வீட்டு வேலைக்குச் சென்ற ஏற்கெனவே பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த நபர் கடத்திச் சென்றுள்ளான். ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினரின் போலீஸிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் அடுத்த நாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in