ஜாமீனில் வெளியேவந்து மீண்டும் அதே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம்: வீடியோ எடுத்து மிரட்டல்!

ஜாமீனில் வெளியேவந்து மீண்டும் அதே பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்த பயங்கரம்: வீடியோ எடுத்து மிரட்டல்!

மத்திய பிரதேசத்தில் 2020 ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர், அதே பெண்ணை கத்திமுனையில் வைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர் 2020-ல் கைது செய்யப்பட்டார். கிட்டத்திட்ட ஒரு வருடம் கழித்து 2021-ல் அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மீண்டும் அதே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தற்போது 19 வயதாகும் அந்தப் பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது அதே குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பேசிய ஜபல்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் ஆசிப் இக்பால், “குற்றம் சாட்டப்பட்ட விவேக் படேல், முன்பு அதே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 2020-ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், ஒரு மாதத்திற்கு முன்பு தனது நண்பருடன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர்கள் இந்த செயலை வீடியோ எடுத்து முந்தைய புகாரை திரும்பப் பெறவில்லை என்றால், வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவதாக மிரட்டியுள்ளனர்" என்று கூறினார்.

இது தொடர்பாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in