அதிர்ச்சி... 17 வயது சிறுமியிடம் அத்துமீறல்... 4 போலீஸாரை சிறையில் அடைக்க உத்தரவு!

போலீஸார்
போலீஸார்
Updated on
1 min read

திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்ற 17 வயது சிறுமியிடம்  காதலன் கண் எதிரிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக திருச்சி முக்கொம்பு பகுதிக்கு தனது காதலனுடன் 17 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார். அங்கு   தேசிய நெடுஞ்சாலை காவல் பணியில் பணிபுரியும்  நான்கு காவலர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முசிறி, திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் நேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில், சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.  இந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பொது இடத்தில் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in