நெருக்கிய வீட்டு இஎம்ஐ... மறுபக்கம் ரம்மி விளையாட்டு: 15 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

நெருக்கிய வீட்டு இஎம்ஐ... மறுபக்கம் ரம்மி விளையாட்டு: 15 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

ஒரு பக்கம் வீட்டு இஎம்ஐ நெருக்கிய நிலையில், ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி ரூ.15 லட்சம் வரை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

கரோனா காலத்தில் பலர் வேலையை இழந்ததோடு பொருளாதார சிக்கலை சந்தித்தனர். பலர் வறுமையில் வாடினர். கடன் தொல்லையால் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்போதுதான், படிப்படியாக மக்கள் மீண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சில ஆன்லைன் நிறுவனங்கள் ரம்மி விளையாட்டை அறிமுகப்படுத்தி பல இளைஞர்களை அதில் சிக்க வைத்து வருகிறது. ஆசையை தூண்டி இளைஞர்களை விளையாட வைக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு, தங்கள் உயிரையும் மாய்த்து வருகின்றனர்.

தற்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் ரூ.15 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஊழியர்கள் அதிகமாக இருப்பதாக காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து தூக்கியது இந்த நிறுவனம். அதில் பிரபுவும் ஒருவர். ஓராண்டுகளாக வேலையில்லாததால் வருமானமின்றி தவித்து வந்துள்ளார் பிரபு. அதே நேரத்தில் வீட்டின் இஎம்ஐ-யும் கட்ட முடியாமல் இருந்து வந்த பிரபு, ஆன்லைன் ரம்மி விளையாட்டிக்கு அடிமையாகியுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டு லோன் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபு. வங்கி தரப்பிலும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ரம்மி விளையாட்டில் பிரபு அடிமையாகியுள்ளார். விளையாட்டில் ஜெயித்து கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்து ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளார் பிரபு. இதனால் வேதனை அடைந்த பிரபு நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல் துறை.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போரூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in