பகுதிநேர வேலை தருவதாக ஆசைகாட்டி ரூ.97ஆயிரம் மோசடி!

பிரபல நிறுவனத்தின் மீது இளைஞர் போலீஸில் புகார்
பகுதிநேர வேலை தருவதாக ஆசைகாட்டி ரூ.97ஆயிரம் மோசடி!

சென்னை, வடபழனி அழகர் பெருமாள் கோயில் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (29). இவர், திருமண நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஸ்ரீனிவாசனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அமேசான் நிறுவனத்தில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், அதற்கு இங்கே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய ஸ்ரீனிவாசன், அந்த லிங்குக்குள் சென்றவுடன் 8 டாஸ்க்குகள் இருப்பதாகவும் அதை முடித்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவிக்கபட்டது.

மேலும், முதலாவது டாஸ்க்கில் ரூ.300 கட்டச் சொல்லியதை அடுத்து, ஸ்ரீனிவாசன் பணத்தை செலுத்தி இருக்கிறார். அதைச் செலுத்தியதும் அவருக்கு இரட்டிப்பாக ரூ.600 கிடைத்துள்ளது. இதேபோல், 7-வது டாஸ்க்கில் ஸ்ரீனிவாசன் பணத்தை கட்டிய உடன், திடீரென அவரது வங்கி கணக்கை முடக்கி அதிலிருந்த ரூ.97,500-ஐ மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீனிவாசன், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில், வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in