
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடகு கடை ஒன்றில் 4.35 கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் பணம் ஆகியவற்றை கையாடல் செய்த ஊழியரை கைது செய்துள்ள போலீஸார், மற்றொரு ஊழியரை தேடி வருகின்றனர்.
சென்னை பூங்கா நகர் வெங்கடாசல முதலியார் தெருவை சேர்ந்த விமல்குமார் ஜெயின் என்பவர் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மன்ங்கிலால், சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருபிரசாத் ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். விமல்குமார் கடையில் இல்லாத நேரத்தில், ஊழியர் மங்கிலாடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விமல்குமார் நகைக்கடையின் கணக்கு விவரங்களை சரிபார்த்த போது, கடையில் இருந்த நான்கு கிலோ தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே ஊழியர்கள் 2 பேரும் தலைமுறைவாகினர்.
இதுகுறித்து விமல்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குரு பிரசாத் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான மங்கிலால் தலைமறைவாக உள்ளார். அவர் ராஜஸ்தான் தப்பிச் சென்று இருக்கலாம் என கருதப்படுவதால் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!