பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்குள் பயங்கர மோதல்... மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த  கைதி ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளவர்களும்,  நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அப்படி  கடந்த ஆண்டு நடைபெற்ற  மோதலில் விசாரணைக் கைதி முத்து மனோ என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த  மருதுவேல்(28), தூத்துக்குடி ஏவிகே நகரைச் சேர்ந்த  சுந்தரமூர்த்தி (27) , தட்டப்பாறையைச் சேர்ந்த சங்கரமூர்த்தி ( 28) ஆகியோர்  கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்  பகுதியில் ராம்குமார்  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதிகளாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை சிறை
பாளையங்கோட்டை சிறை

இந்நிலையில் இன்று காலை சிறை வளாகத்திற்குள் அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கம்பிகள் மற்றும் தட்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மருதுவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை போலீஸார்  பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது பற்றி பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in