குழந்தை விற்பனை விவகாரம்… மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது!

குழந்தை விற்பனை விவகாரம்… மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது!

தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதா குழந்தை விற்பனை தொடர்பாக ஏற்கேனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அவருடன் லோகாம்பாள் என்ற இடைத்தரகரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது, குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் பாலாமணி கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர். முன்னதாக லோகாம்பாள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலாமணியை கைது செய்துள்ளனர்.

அவரிடம், யாருக்கெல்லாம் குழந்தைகள் விற்பனை செய்தீர்கள், உறுப்பு விற்பனை, அதற்கு தொடர்பில் உள்ள நெட்வொர்க் ஆகிய விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தனிப்படை போலீஸார் சேலம், கரூர் பகுதியில் உள்ள இடைத்தரகர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in