ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!


ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!

திண்டுக்கல் அருகே திருவிழாவிற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இசைக்கலைஞர் ரயில் மர்மமான முறையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் ஆனந்த் (21). பெங்களூருவில் இசைக்கலைஞராக வேலை பார்த்து வந்த இவர், ஊர் திருவிழாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வந்தார்.

இந்நிலையில், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே ஆனந்த் ரயிலில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இன்று காலை ஒட்டன்சத்திரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் ஆனந்த் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், விபத்து காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in