பகீர்... பெரும் சோகம்... தீபாவளி சிறப்பு ரயிலுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!

சூரத் ரயில் நிலையத்தி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு
சூரத் ரயில் நிலையத்தி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு

குஜராத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்று சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமானோர் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் அலைமோதினர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட்டது. இதில் பயணிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சூரத் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

சிறப்பு ரயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால் கூட்ட நெரிசல்
சிறப்பு ரயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால் கூட்ட நெரிசல்

இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு ரயிலில் பயணிப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததே, இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ள காவல் துறையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் முண்டியடித்து ஏறியதால் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் பலி
ரயில்களில் முண்டியடித்து ஏறியதால் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் பலி

இதனிடையே சிறப்பு ரயில்கள் குறித்து போதிய தகவல்களை ரயில் நிலைய முகப்பில் வைக்க ரயில்வேத்துறை தவறியதால், ஏராளமானோர் ஒரே நடைமேடையில் குவிந்ததால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயணிகளுக்கு தகவல் வழங்க போதுமான ரயில்வே பணியாளர்கள், ரயில் நிலையத்தில் இல்லை எனவும் பயணிகள் தெரிவித்தனர். இந்த தகவலை மறுத்துள்ள ரயில்வேத்துறை அதிகாரிகள், போதுமான ஊழியர்கள் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள், ரயில் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிந்ததே நெரிசலுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in