
சூனியக்காரி என நினைத்து மூதாட்டி ஒருவரை ஒரு கும்பல் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கதிகாரைச் சேர்ந்தவர் புகியா தேவி75). இவர் மகாதலித் தோலா பகுதியில் மருமகள் மற்றும் பேரன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், புகியா தேவி நேற்று காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், புகியா தேவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது உள்ளூரைச் சேர்ந்த முனிவர், ஒரு கும்பலைத் தூண்டிவிட்டு கொலை செய்ததாக மருமகள் கூறினார்.
இதுகுறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில், மண்ணி ரிஷி என்ற முனிவர் தனது கணவரின் மரணத்திற்கு என் மாமியார் தான் காரணம் என்று கூறியதுடன், சூனியக்காரியான அவரைக் கொலை செய்து விடுவேன் என்று பலமுறை மிரட்டினார். அவர் தான் ஆட்களை ஏவி இந்த கொலையை செய்ததாக கூறினார். அத்துடன் கிராமத்தில் தனது மாமியாரை சூனியக்காரி என அழைத்தனர் என்று கூறினர்.
மூதாட்டியுடன் ஒரே வீட்டில் படுத்துறங்கிய மருமகளுக்கு இந்த கொலைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னதால் அவர் இந்தக் கொலையைச் செய்தாரா, வேறு கும்பல் செய்ததா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.