
திருப்பூரில் சொத்து பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்து திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மாராத்தாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் அருக்கானிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அருக்காணி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து இன்று மீண்டும் மனு அளிப்பதற்காக அருக்காணியும், அவரது மகன் குப்புசாமியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில் மன்னனை ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?