சாலையில் திடீரென பற்றி எரிந்த மின்சார பைக்... ஓலா நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்!

சாலையில் தீப்பற்றி எரிந்த ஓலா வாகனம்
சாலையில் தீப்பற்றி எரிந்த ஓலா வாகனம்

மகாராஷ்டிராவில் ஓலா மின்சார பைக் ஒன்று சாலையில் திடீரென பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஓலா நிறுவனம், போலி உதிரிபாகங்களை மாற்றியிருந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில், ஓலா, ஏத்தர், டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே அவ்வப்போது, மின்சார பைக்குகள் தீப்பிடித்து எரிவதாக வெளியாகும் தகவல்களால், வாகன ஓட்டிகளிடையே குழப்பமும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது.

சாலையில் தீப்பற்றி எரிந்த ஓலா வாகனம்
சாலையில் தீப்பற்றி எரிந்த ஓலா வாகனம்

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவன பைக் ஒன்று, திடீரென புகை கக்கியபடி, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பைக்கின் உரிமையாளர் உயிர்தப்பிய நிலையில், வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இதனிடையே இது குறித்து விளக்கமளித்துள்ள ஓலா நிறுவனம், போலி உதிரிபாகங்களை பயன்படுத்தியதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறியுள்ளது. பைக்கின் பேட்டரி சேதமடையாமல் இருப்பதாக கூறியுள்ள நிறுவனம், மின்கசிவு ஏற்பட்டதற்கு போலி உதிரிபாகங்களே காரணம் எனவும் விளக்கமளித்துள்ளது.

ஓலா நிறுவனம் விளக்கம்
ஓலா நிறுவனம் விளக்கம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in