கிரிப்டோ கரன்சி பெயரில் அடுத்த மோசடி; 8 மாநிலங்களின் 2.50 லட்சம் ஏமாளிகளிடம் ரூ.200 கோடி சுருட்டல்

கிரிப்டோ கரன்சி மோசடி
கிரிப்டோ கரன்சி மோசடி

கிரிப்டோகரன்சி பெயரில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி மூலம், 8 மாநிலங்களின் இரண்டரை லட்சம் மக்களிடம் ரூ200 கோடிக்கும் மேல் அபகரிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லது பொன்ஸி திட்டம் என்ற போர்வைகளில் புதிதுபுதிதாய் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றில் லேட்டஸ்டாக இடம் பெற்றிருப்பது கிரிப்டோ கரன்சி பெயரிலான முதலீடு. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றில் தற்போது வட மாநில மோசடிக் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி
கிரிப்டோ கரன்சி மோசடி

பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம், ஹரியானா, குஜராத், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்த ‘யெஸ் வேர்ல்ட் கிரிப்டோ டோக்கன்’ நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, கிரிப்டோ-பொன்ஸி மோசடியை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூரி நகரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கிரிப்டோ-பொன்ஸி குறித்தான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிரிப்டோ-போன்சி மோசடி இதுவாகும்.

கிரிப்டோ கரன்சி மோசடி
கிரிப்டோ கரன்சி மோசடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in