செங்கல் சூளை
செங்கல் சூளை

அதிர்ச்சி; மானாமதுரையில் ஒடிசா பெண் பாலியல் பலாத்காரம்; நால்வருக்கு வலைவீச்சு

மானாமதுரை அருகே செங்கல் சூளையில் குழந்தைகளுடன் தங்கியிருந்த ஒடிசா மாநில பெண் தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநில பெண் தங்கியுள்ள வீடு
ஒடிசா மாநில பெண் தங்கியுள்ள வீடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பூக்குளம் அருகே உள்ள செங்கல் காளவாசலில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் 7 வருடமாக வேலை பார்த்து வந்தனர். இதில் அந்த பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அந்த பெண், கடந்த நான்கு வருடங்களாக இரு குழந்தைகளுடன் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த கீழப்பாசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குடி போதையில் தெக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆதியின் நண்பர்கர்களான 4 இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த ஒடிசா பெண் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கீழமேல்குடி தெற்கூரை சேர்ந்த 4 இளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ஏடிஎஸ்பி நமசிவாயம், டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் மானாமதுரை காவல் லையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடும்பத்தை காக்க இரு குழந்தைகளுடன் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வடமாநில பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in