நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்...நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் போலீஸ் அதிரடி!

நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்...நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் போலீஸ் அதிரடி!

கொல்கத்தா காவல்துறை நான்காவது முறையாக அனுப்பிய சம்மனுக்கும் ஆஜராகத் தவறியதால், நுபுர் சர்மாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் பற்றிய தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பரவலாக வன்முறை வெடித்தது. இதனால் கொல்கத்தாவின் ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்கள் தனித்தனியாக அவருக்கு தலா இரண்டு முறை சம்மன் அனுப்பியது. தொடர்ந்து நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், கொல்கத்தா காவல்துறை சனிக்கிழமையன்று நுபுர் சர்மாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தாவுக்குச் சென்றால் தன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் காவல்துறை முன்பாக ஆஜராக நுபுர் சர்மா தரப்பில் நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in