நுபுர் ஷர்மா, நவீன் ஜிந்தல்,சபா நக்வி மீது எஃப்ஐஆர்!

நுபுர் ஷர்மா, நவீன் ஜிந்தல்,சபா நக்வி மீது எஃப்ஐஆர்!

சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் ஷர்மா, நவீன் ஜிந்தல் மற்றும் பத்திரிகையாளர் சபா நக்வி உள்ளிட்டவர்கள் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

டெல்லி பாஜக ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் நவீன் ஜிந்தல், பத்திரிக்கையாளர் சபா நக்வி, இந்து மகாசபா அலுவலகப் பொறுப்பாளர் பூஜா ஷகுன் பாண்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த மௌலானா முப்தி நதீம் மற்றும் பீஸ் பார்ட்டியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷதாப் சவுகான் உள்ளிட்ட 8 பேர் மீது சமூக வலைதளங்கள் மூலம் இரு சமூகங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீதும் இதே பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா, "வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்புபவர்கள், பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக நாங்கள் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் சமூக ஊடக கணக்குகளைக் கண்காணித்து விசாரணை நடத்தி வருகிறோம் " என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in