பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு... போலீஸார் அதிரடி!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியின் உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது சிறப்பு புலனாய்வுக்குழு.

கா்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பியும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலிகளாக பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு வெடித்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சார்பில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் போட்டியிட்டார். அந்த தொகுதியின் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு இந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகியன. இந்த விவகாரம் பூதாகரமானதும் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பிச்சென்று விட்டார். அவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. இதனை அடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து பிரஜ்வல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அவரது தந்தை ரேவண்ணா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க '6360938947' என்ற உதவி எண்ணை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு வெளியிட்டுள்ளது.

ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்
ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள காவல்துறை டி.ஜி.பியும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருமான பி.கே.சிங், “பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க நேரில் வர அவசியமில்லை. 6360938947 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எங்களின் குழு உங்களை அணுகி தனிப்பட்ட முறையில் தகவல்களை வாங்கிக் கொள்வார்கள். உங்களுடையத் தனிப்பட்ட தகவல்கள் எங்கும் பகிரப்படாது. உங்களுக்கான நீதி கிடைக்க எங்களின் குழு உறுதி அளிப்பார்கள்.

மேலும், பிரஜ்வல் மற்றும் அவரது தந்தையால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய காணொளிகளை யாரும் தனிப்பட்ட முறையில் பகிர வேண்டாம். அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா குறித்து புகார் தெரிவிக்க போலீஸார் ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் அடுத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in