அதிர்ச்சி வீடியோ! சாலையில் பட்டாசு வெடித்த குடும்பம்; அசுர வேகத்தில் வந்த கார்... 3 பேர் தூக்கிவீசப்பட்ட பயங்கரம்!

நொய்டா விபத்து
நொய்டா விபத்து

நொய்டாவில் சாலையில் பட்டாசு வெடித்த 3 பேர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்டாகோ அமன்ட்ரன் செக்டார் பகுதியை சேர்ந்தவர் சவுரவ் சிங்(40). இவர் கடந்த 12ம் தேதி தீபாவளி அன்று இரவு தனது 8 வயது மகள் மற்றும் மாமனார் விஜயகுமார்(72) ஆகியோருடன் இணைந்து வீட்டின் முன்னால் உள்ள சாலையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in