பெட்ரோல் குண்டு வீச்சு; நியாயமான விசாரணை நடக்கவில்லை - ஆளுநர் மாளிகை பகீர் குற்றச்சாட்டு!

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை, தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் அருகே நேற்று பகல் ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து விசாரணையில் அவர் கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை எதிர்த்து தான் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் சிறையில் நீண்டகாலமாக இருந்து வருவோரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பதாகவும் அதனால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்யவில்லை என்றும், அவர் தப்பியோடி விட்டதாக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஆளுநர் மாளிகை தாக்குதல் தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ‘’ராஜ்பவனின் தாக்குதல் குறித்து புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார். தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப் போக செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது’’ என பரபரப்பு குற்றச்சாட்டை ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in