சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீஸ் பாதுகாப்புடன சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைக்குப் பின்னரே முழுமையாக தகவல் அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in