கோவையில் பரபரப்பு.. தீவிரவாத செயலுக்கு பயிற்சியா? 22 இடங்களில் என் ஐ.ஏ சோதனை!

கோவையில் பரபரப்பு.. தீவிரவாத செயலுக்கு பயிற்சியா? 22 இடங்களில் என் ஐ.ஏ சோதனை!

கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையை குறி வைத்து அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய ஆதாரங்கள்,  தீவிரவாத தொடர்புடைய தகவல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகாமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளை குறி வைத்து  என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையில் ஜி எம் நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உட்பட 22 இடங்களிலும் சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீடு உட்பட மொத்தம் 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in