
வெளிநாட்டில் இருந்து ஆட்களை கடத்திய விவகாரத்தில் நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
வெளிநாட்டில் இருந்து ஆட்களை விலைக்கு வாங்கி ஆட்கடத்தல் மேற்கொண்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வட மாநிலத்தவர் போல் பலர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளனர்.
இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் ராமநாதபுரத்தில் இம்ரான் கான் என்ற முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையில் இருந்து 1.83 கோடி ரூபாய்க்கு 38 இலங்கை நாட்டவரை வாங்கி கடத்தி வந்து தமிழகத்தில் போலியான ஆதார் கார்டு மூலமாக கொண்டு வந்த விவகாரத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறாக பல்வேறு மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து ஆட்கள் கடத்தி கொண்டுவரப்பட்டது தொடர்பாக இன்று தேசிய அளவிலான சோதனையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில் திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியாணா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில், மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்து மறைமலை நகரில் நடத்தப்பட்ட சோதனையில், வங்களாதேசத்தைச் சேர்ந்த முன்னா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் கைது செய்தனர். இதேபோல் படப்பையில் சகாபுதீன் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்கள், போலியான ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு போலி ஆதார்கார்டு தயாரித்து வேலை வாங்கி கொடுத்த ஷாஹித் உசேன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மூன்று வங்களாதேசத்தினர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் திரிபுராவை சேர்ந்தவர்கள் போல போலி ஆதார் கார்டு வைத்திருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எத்தனை பேர் தரகர்களாக செயல்பட்டுள்ளார்கள் எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு பேரை இந்தியாவிற்குள் போலி ஆவணங்கள் மூலம் கொண்டு வந்து வேலை செய்ய வைத்துள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாநிலங்களில் வேலைக்காக வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஆட்கள் விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கேளம்பாக்கத்தில் 16 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வேலை பார்த்து வந்ததை கண்டுபிடித்து என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!