ரூ.10,00,000 பரிசு... புதிய அறிவிப்பை வெளியிட்டது என்ஐஏ; பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்த பாய்ச்சல்

என்ஐஏ அறிவிப்பு
என்ஐஏ அறிவிப்பு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள 2 மர்ம நபர்கள் தொடர்பாக, ரகசியத் தகவல் அளிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை என்ஐஏ அறிவித்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முதல் கைது புதன்கிழமை நடந்தது. இது தொடர்பாக நேற்று தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பினை நடத்திய நபர் மற்றும் அவருக்கு உதவியவர் என தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை வளைக்க முடிவு செய்துள்ளது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு

இதற்காக ஜனத்திரள் மத்தியில் மாறுவேடத்தில் நடமாடும் இருவரையும் கைது செய்ய பொதுமக்கள் உதவியை என்ஐஏ கோரியுள்ளது. அதன்படி தலைமறைவு குற்றவாளிகள் இருவர் குறித்தும் தகவல் அளிப்போருக்கு ரூ10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மற்றுமொரு அறிவிப்பினை இன்று மாலை வெளியிட்டுள்ளது. இதன்பொருட்டு தலைமறைவு நபர்களை அடையாளம் காணும் நோக்கத்தில், அந்த இருவரின் அடிப்படை விவரங்களையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் சிசிடிவி காட்சிகளில் சிக்கிய முக்கிய குற்றவாளி, முசாவிர் ஷாஜிப் ஹுசைன் என்று என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது. சுமார் 6 அடி 2 அங்குல உயரம் கொண்ட 30 வயதுடையவர் என்றும் அவர் குறித்தான அடையாளங்களை என்ஐஏ விவரித்துள்ளது. முகமது ஜூனேத் சயீத் என்ற பெயரில் போலி ஓட்டுநர் உரிமத்தை இவர் பயன்படுத்துவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பில் மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் அகமது தாஹா என்பவர், குண்டுவெடிப்பை முசாவிர் மேற்கொள்ள உதவியதாக என்ஐஏ கண்டறிந்துள்ளது. இவர் தனது அசல் அடையாளத்தை மறைக்க விக்னேஷ் மற்றும் சுமித் போன்ற பெயர்களுடன் இந்து அடையாளத்தில் உலவுவதாகவும் என்ஐஏ மேலும் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த இருவரும், ஊர்களின் ஒதுக்குபுறமான குறைந்த பட்ஜெட் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கும் வழக்கமுடையவர்கள் என்றும், தங்கள் அடையாளங்களை மறைக்க மாறுவேடத்திலும், போலி மீசை மற்றும் தாடியுடனும் உலவுகிறார்கள் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை வழங்குபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதற்காக சந்தேக நபரின் ஓவியங்களையும் முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியிலிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இணைந்து சதி மேற்கொண்ட ஷரீப்பை என்ஐஏ கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை கைது செய்ய புதிய வெகுமதி அறிவிப்பையும் இன்று என்ஐஏ வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in